/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பஸ் கட்டண உயர்வு பிரச்னை: மீண்டும் உடைந்தது சங்கம்பஸ் கட்டண உயர்வு பிரச்னை: மீண்டும் உடைந்தது சங்கம்
பஸ் கட்டண உயர்வு பிரச்னை: மீண்டும் உடைந்தது சங்கம்
பஸ் கட்டண உயர்வு பிரச்னை: மீண்டும் உடைந்தது சங்கம்
பஸ் கட்டண உயர்வு பிரச்னை: மீண்டும் உடைந்தது சங்கம்
கோவை : கட்டண உயர்வு கேட்டு போராட்ட அறிவிப்பு வெளியிட்டதால் மினிபஸ் <உரிமையாளர் சங்கம் இரண்டாக உடைந்தது.
மினிபஸ் இயக்கத் திற்கு நல்ல திட்டங்களை அறிவித்துள்ள தமிழக அரசை எதிர்த்து சில மினிபஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கோயமுத்தூர் மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து கோயமுத்தூர் மினிபஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: கோவை ஆர்.டி.ஓ., எல்லைக்குட்பட்ட வடக்கு பகுதியில் 36 மினிபஸ்களும், தெற்கில் 66 மினிபஸ்களும் இயங்குகிறது. அதிக அளவிலான உறுப்பினர்களை கொண்ட சங்கமாக "கோயமுத்தூர் மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம்' செயல்பட்டு வருகிறது. மினி பஸ்களை மேம்படுத்த நல்ல பல திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சிலர் கோர்ட்டில் இடைக்கால தடை பெற்றதால் திட்டங்கள் அனைத்தும் நிலுவையிலுள்ளது. தடை நீக்கம்செய்யப்பட்ட உடன் திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் அது வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதற்குள் போராட்டம், கட்டண உயர்வு என்று கோவையிலுள்ள சில மினிபஸ் உரிமையாளர்கள் அரசுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதை ஏற்க மறுத்த சில உரிமையாளர்கள் எங்களது சங்கத்திலிருந்து வெளியேறி புதியதாக சங்கத்தை துவக்கியுள்ளனர். அந்த சங்கத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 95 உறுப்பினர்களை கொண்டு எங்கள் சங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. எங்களது சங்கத்துக்கும் அரசுக்கும் மட்டுமே நேரடி தொடர்பு உள்ளது. செம்மொழி மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்தி வரும் அரசு அதிகாரிகளை திசை திருப்புவதற்காக சிலர் திட்டமிட்டு இது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் அதிக பட்சம் 12 மினிபஸ்களை மட்டுமே ஓடாமல் நிறுத்த முடியும். மற்ற மினிபஸ்கள் வழக்கம் போல் ஓடும். இவ்வாறு கோயமுத்தூர் மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.